india newzealand first oneday match
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 281 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். கேதர் ஜாதவும் 12 ரன்களில் வெளியேறினார்.
மளமளவென விக்கெட்டுகள் சரிந்த நிலையில், கேப்டன் விராட் கோலி தினேஷ் கார்த்திக் ஜோடி சற்று நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 37 ரன்களில் தினேஷ் கார்த்திக் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய தோனியும் சோபிக்க தவறினார்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 31-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்ட கேப்டன் கோலி, 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் சவுதி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
