ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு பேக்கர்-அன்மோல் இணை தங்கம் வென்றது. அத்துடன், புதிய உலக சாதனையையும் படைத்தது.

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 

இதன் ஜூனியர் மகளிர் 'ஸ்கீட்' பிரிவு துப்பாக்கி சுடுதலில் தனிநபர் பிரிவில் கனேமத் செகான் வெண்கலம் வென்றார். 

சிட்னி நகரில் நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்புப் பிரிவில் இந்தியாவின் 17 வயது ஸ்ரேயா அகர்வால், 19 வயது அர்ஜூன் பாபுதாஆகியோர் 432.8 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றனர். 

இதே பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய சகநாட்டவர்களான இளவேனில் வாளரிவன் இளவேனில் (18), தேஜஸ் கிருஷ்ண பிரசாத் (20) ஆகியோர் 389.1 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்தனர்.

இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே மானு பேக்கர் - அன்மோல் இணை ஆதிக்கம் செலுத்தி இறுதிச்சுற்றில் 478.9 புள்ளிகள் பெற்று ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் புதிய உலக சாதனையை இருவரும் படைத்தனர். இதில், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை சீனா தட்டிச் சென்றது. 

சிட்டி தொடரில் இதுவரை இந்தியா 7 தங்கம் உள்பட 18 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. 22 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.