india is the test champion

இந்திய அணி இந்த ஆண்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன், டெஸ்ட் தரவரிசையில் 124 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் இருந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியில் தோற்று தொடரை இழந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது. 

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு பின்னதாக 121 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக 111 புள்ளிகளுடன் இருந்த தென்னாப்பிரிக்கா, இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் வென்றதன்மூலம் 4 புள்ளிகள் அதிகம் பெற்று 115 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்தியாவுடனான தொடருக்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் வரையிலான காலத்தில் முதலிடத்தில் இருக்கும் அணி, டெஸ்ட் சாம்பியன் ஆகும். அந்த அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டாயுதம் வழங்கப்படும்.

இந்நிலையில், தற்போதுவரை இந்திய அணி தான் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என வென்றாலும் தென்னாப்பிரிக்கா முதலிடத்திற்கு வர முடியாது.

எனவே இந்த ஆண்டும் இந்திய அணிதான் டெஸ்ட் சாம்பியன். மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டாயுதம் மற்றும் ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகையும் இந்திய அணிக்கு வழங்கப்படும்.