சர்வதேச கால்பந்து சங்கங்களுக்கான சம்மேளனத்தின் (ஃபிஃபா) தரவரிசைப் பட்டியலில் மூன்று இடங்கள் ஏற்றம் கண்டு இந்தியா 99-வது இடத்துக்கு வந்துள்ளது.

இந்தியா, தரவரிசை மதிப்பீட்டு கால​கட்​டத்தில் எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டில் முதல் முறையாக முதல் 100 இடங்களுக்குள்ளாக வந்துள்ள இந்தியா, தற்போது 339 புள்ளிகளோடு லிபியாவுடன் தனது இடத்தை பகிர்ந்​து​கொண்டுள்ளது.

கடந்த ஆண்டில் மூன்று முறை 100 இடங்களுக்குள்ளாக வந்த இந்தியா இறுதியாக 105-வது இடத்துடன் 2017-ஆம் ஆண்டை நிறைவு செய்தது. இந்தியா தனது தரவரிசை வரலாற்றில் அதிகபட்சமாக கடந்த 1996-ஆம் ஆண்டு 94-வது இடம் வரை முன்னேறியிருந்தது.

இத​னி​டையே, சர்​வ​தேச தர​வ​ரி​சை​யில் ஆசிய நாடு​க​ளின் வரி​சை​யில் இந்​தியா 13-வது இடத்​தில் உள்​ளது. அத​னை​ய​டுத்து கத்​தார், ஓமன், ஜோர்​டான், பஹ்​ரைன், வட கொரியா அணி​கள் உள்ளன.

ஆசிய நாடு​கள் வரி​சை​யில் முத​லி​டத்​தில் இருக்​கும் ஈரான், சர்​வ​தேச வரி​சை​யில் 33-வது இடத்தில் இருக்​கி​றது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சாம்​பி​ய​னான ஜெர்​மனி சர்​வ​தேச தர​வ​ரி​சை​யில் முத​லி​டத்​தில் உள்​ளது. பிரே​சில், போர்ச்சு​கீ​சிய அணி​கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்​க​ளில் உள்​ள​ன.