India has won the championship title for the first time in the ITF World Tour competition.
சிலி ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் செளம்யஜித் கோஷ் – அந்தோணி அமல்ராஜ் இணை வெற்றிப் பெற்று முதல்முறையாக இந்தியாவிற்கு தங்கம் பெற்றுத் தந்துள்ளனர்.
சிலி ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி சிலி தலைநகர் சான்டியாகோவில் நடைபெற்றது.
இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் செளம்யஜித் கோஷ், சகநாட்டவரான அந்தோணி அமல்ராஜுடன் மோதினார்.
இதில், 8-11, 13-11, 11-6, 11-9, 4-11 11-7 என்ற செட் கணக்கில் அந்தோணி அமல்ராஜை தோற்கடித்து வாகைச் சூடினார் சௌம்யஜித்.
இந்த வெற்றியின் மூலம் ஐடிடிஎப் உலக டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் சௌம்யஜித் கோஷ்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் செளம்யஜித் கோஷ் - அந்தோணி அமல்ராஜ் ஜோடி 13-11, 10-12, 14-12, 11-9 என்ற செட் கணக்கில் பல்கேரியாவின் பிலிப் புளோரிட்ஸ் - ருமேனியாவின் ஹுனார் சாக்ஸ் இணையை வீழ்த்தியது.
இதனால், ஆடவர் இரட்டையர் பிரிவிலும் இந்தியா சாம்பியன் வென்றுள்ளது.
ஐடிடிஎப் சேலஞ்ச் அல்லது ஐடிடிஎப் உலக டூர் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றிருப்பதும் இதுவே முதல்முறை.
