india going to bat against south africa

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. குரூப் - ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குரூப் - பி பிரிவில் இருக்கும் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடி முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தியாவின் வெற்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இலங்கையிடம் இந்தியா அதிர்ச்சி அளிக்கும் வகையில் தோல்வி அடைந்தது. இதனால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு தள்ளிப் போனது. 

இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்தியா 300 ரன்களுக்கு மேல் குவித்தும், பந்துவீச்சில் சோபிக்கத் தவறியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 

இதற்கிடையே குரூப் - பி பிரிவில் இருக்கும் நான்கு அணிகளும் தலா வெற்றி ஒரு தோல்வி யுடன் இருப்பதால் அடுத்து நடக்க இருக்கும் இரண்டு லீக் போட்டிகளும் காலிறுதிச்சுற்றாக மாறியுள்ளது. நாக் அவுட் முறையில் இந்தியா - தென் ஆப்ரிக்காவையும், பாகிஸ்தான் - இலங்கையையும் எதிர்கொள்கின்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

இதற்கிடையே இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான நாக் அவுட் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்பதால், ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.