Asianet News TamilAsianet News Tamil

ஹாட்ரிக் கோல் போட்ட மந்தீப் சிங் - ஜப்பானை கதறவிட்டது இந்திய அணி

india defeated japan in aslan sha hockey
india defeated-japan-in-aslan-sha-hockey
Author
First Published May 3, 2017, 4:23 PM IST


மலேசியாவில் நடந்து வரும் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியில், இன்று நடந்த லீக் ஆட்டத்தில், ஜப்பான் அணியை 3-4 என்ற கோல் கணக்கில் விரட்டியது இந்திய அணி.  

26-வது அஸ்லான் ஷா ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, மலேசியா, இங்கிலாந்து, ஜப்பான், நியூசிலாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் டிரா செய்த இந்திய அணி, அடுத்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது,ஆஸ்திரேலியாவிடம் நேற்று தோல்விகண்டது.  

india defeated-japan-in-aslan-sha-hockey

இந்நிலையில், இன்று நடந்த லீக் ஆட்டத்தில்  கேப்டன் மனாபு யாமஷிட்டா தலைமையிலான ஜப்பான் அணியை எதிர்த்துமோதியது மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய அணி சிறப்பான கோல் அடித்தது.அணியின் ரூபேந்திர பால்சிங் 8-வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார். அதற்கு பதிலடியாக ஜப்பான் வீரர் காசுமா முராட்டா 13-வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தார்.

அதன்பின் இரு அணியினரும், கோல்அடிக்க கடுமயைாகப் போராடினர். 2-ம் கால்பகுதியில் 43-வது நிமிடத்தில் ஹெய்ட்டா யோஷிகாரா கோல் அடித்து அணியை 2-1 என முன்னிலைப்படுத்தினார். அடுத்த 2 நிமிடத்தில் ஜெங்கி மிதானி கோல் அடிக்க ஜப்பான் 3-1 என்றுமுன்னிலையில் இருந்து.

ஆனால், ஜப்பான் 3-வது கோல் அடித்தவுடன் இந்திய வீரர் மன்தீப்சிங் 45-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின், 51வது, 58-வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை 4-3 என்று முன்னிலைப்படுத்தினார். இந்த கோலை ஈடு செய்ய ஜப்பான் அணி கடைசி வரை முயன்று முடியாததையடுத்து, 4-3 என்ற கணக்கில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது.

இதையடுத்து, இந்திய 4 போட்டிகளில் விளையாடி ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios