India China is going to host the follow

சீனாவைப் போல பல்வேறு விளையாட்டுகள் அடங்கிய போட்டிகளை இந்தியாவில் நடத்தவே எப்போதும் எதிர்ப்பார்க்கிறோம் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயலை நேற்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் நேற்றுச் சந்தித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

“காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் பல்வேறு நாடுகள் கலந்து கொண்டுள்ளன. அதில், இந்தியா இப்போது கலந்து கொள்வது என்பது தாமதமான நடவடிக்கை.

லண்டன், மான்செஸ்டர், பிர்மிங்கம் ஆகிய நகரங்களில் காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கு பிரிட்டன் தயாராக இருக்கிறது. எனவே, இந்த சூழ்நிலையில் இந்தியா ஏலத்தில் பங்கேற்பது பலனளிக்காது.

பல்வேறு விளையாட்டுகள் அடங்கிய போட்டிகளை நடத்துவதையே நாங்கள் எதிர்நோக்கி வருகிறோம். சீனா, கடந்த 15 - 20 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் அதைத் தான் செய்துகொண்டிருந்தது. அதே முறையை நாமும் பின்பற்றலாம்.

சீனாவைப்போல பல்வேறு விளையாட்டுகள் அடங்கிய போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படாத வரையில், நமது வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்காது. அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கான உந்துதலும் கிடைக்காது.

90 நாள்களுக்கு உள்ளாக தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். எனவே, பல்வேறு விளையாட்டுகள் அடங்கிய போட்டிகளை நடத்தவே எப்போதும் எதிர்பார்க்கிறோம்” என்று ராமச்சந்திரன் பேட்டியளித்தார்.