Asianet News TamilAsianet News Tamil

டிராவில் முடிந்த இந்தியா – குவைத் போட்டி: இந்தியாவுக்கு அரையிறுதி கன்ஃபார்ம்!

இந்தியா மற்றும் குவைத் அணிகளுக்கு இடையிலான தெற்காசிய கால்பந்து போட்டி டிராவில் முடிந்துள்ளது.

India and Kuwait Match ended with draw at Kanteevara stadium in SAFF Championships 2023
Author
First Published Jun 28, 2023, 12:13 AM IST

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டியில் இந்திய கேப்டன் சுனில் சேத்தரி ஹாட்ரிக் கோல் அடிக்க இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளது – வாசீம் அக்ரம்!

இந்தப் போட்டியைத் தொடர்ந்து இந்தியா, நேபாள் அணியை எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய முதல் அரை மணி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவே இல்லை. ஆகையால், முதல் அரைமணி நேரம் டிராவில் முடிந்தது. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் முதல் அரை மணி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 4 போட்டிகளில் கேப்டன் சுனில் சேத்தரி கோல் அடித்தார். ஒரு போட்டி டிராவில் முடிந்தது. அதன் பிறகு கேப்டன் சுனில் சேத்தரி ஒரு கோல் அடித்து கொடுக்க, இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இது சுனில் சேத்தரி அடித்த 91ஆவது கோல் ஆகும்.

ராம் அரவிந்த் அதிரடியால் லைகா கோவை கிங்ஸ் 199 ரன்கள் குவிப்பு!

இதைத் தொடர்ந்து, மகேஷ் நௌரேம் சிங் தனது முதல் கோல் அடித்துக் கொடுக்க, இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. கடைசியாகவும் இந்தியாவிற்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனினும், அதில் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியாக இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் நேபாள் அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் குவைத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில், போட்டியின் 45 ஆவது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்தரி ஒரு கோல் அடிக்க இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. போட்டியின் 2ஆவது பாதியிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது.

முழங்கால் காயம் ஒரு புறம் இருக்க, மறுபுறம் லோன் – பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டேன் – சுரேஷ் ரெய்னா!

இதில், 90ஆவது நிமிடம் முடிந்த பிறகு கூடுதல் நிமிடம் வழங்கப்பட்டது. அப்போது இந்திய அணி வீரர் அன்வலி அலி தவறு செய்யவே, குவைத் அணிக்கு கோல் வழங்கப்பட்டது. இதன் காரணமாக போட்டி நேரம் முடியவே இந்தியா மற்றும் குவைத் அணிகள் 1-1 என்று சமநிலை பெற்றன. எனினும், இந்தியா மற்றும் குவைத் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios