பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அமித் குமார் சரோஹா வெள்ளிப் பதக்கம் வென்றார்

இலண்டனில் நடைபெற்ற பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் 'கிளப் த்ரோ' போட்டியில் இந்தியாவின் அமித் குமார் சரோஹா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்தப் போட்டியில் அமித் குமார் ஆடவர் 'கிளப் த்ரோ' போட்டியில் தனது மூன்றாவது வாய்ப்பில் 30.25 மீ. தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் அவர் ஆசிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

இதேப் பிரிவில் செர்பியாவின் ஜெல்கோ டிமிட்ரிஜெவிச் 31.99 மீ. தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றதோடு உலக சாதனையும் செய்து அசத்தியுள்ளார்.