India - Sri Lanka second game today Is India a sequel?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடைபெறுகிறது.
மொத்தம் மூன்று ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடரில் ஒரு வெற்றியுடன் முன்னிலையில் உள்ளது இந்தியா. 2-வது ஆட்டத்திலும் வெல்லும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும்.
மறுபுறம், இலங்கை இந்தத் தொடரில் தனது முதல் வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்திய அணியை எதிர்கொள்ள இலங்கை தடுமாறி வருகிறது. தொடர் வெற்றிகளை பெற்று வரும் இந்தியா, பலவீனமான நிலையில் இருக்கும் இலங்கையிடம் முதல் ஒருநாள் ஆட்டத்தில் தோற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியைப் பொருத்த வரையில், முதல் ஆட்டத்தில் 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதே உத்வேகத்துடன் 2-வது ஆட்டத்தை எதிர்கொள்ளும்.
தொடக்க வீரரும், கேப்டனுமான ரோஹித் சர்மா, தோனி, மணீஷ் பாண்டே ஆகியோர் முதல் ஆட்டத்தைப் போலவே, 2-வது ஆட்டத்திலும் அசத்துவர். அவர்களுக்கு அடுத்தபடியாக பாண்டியா உள்ளிட்டோர் பக்கபலமாக உள்ளனர்.
பந்துவீச்சைப் பொருத்த வரையில் கடந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய யுவேந்திர சாஹல், இந்த ஆட்டத்திலும் இலங்கை பேட்ஸ்மேன்களை திணறடிக்க உள்ளார். அவருக்கு உறுதுணையாக குல்தீப் யாதவ் இருக்கிறார். வேகப்பந்துவீச்சுக்கு பும்ரா, உனத்கட் ஆகியோர் உள்ளனர்.
இலங்கை அணியைப் பொருத்த வரையில் முதல் ஆட்டத்தில் அந்த அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்ததால் 87 ஓட்டங்களுக்குள் சுருண்டது. மேத்யூஸ் உள்ளிட்ட மூத்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது அணிக்கு பலவீனமாக அமைந்தது. எனவே, இந்த ஆட்டத்தில் இலங்கை அணி அதனை முறையாகக் கையாளும்..
பந்துவீச்சைப் பொருத்த வரையில் நுவான் பிரதீப், தனஞ்ஜெயா, பெரேரா உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.
