India - Sri Lanka first T20 game starts today Sri Lanka will win

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று ஆட்டங்களைக் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெறுகிறது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி இதுவரை மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் மோதியுள்ளது. இந்த இரண்டிலுமே இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, எஞ்சியுள்ள டி-20 தொடரையும் கைப்பற்றி இலங்கையை வொயிட் வாஷ் செய்யும் முனைப்பில் களம் காண்கிறது இந்தியா.

டி-20 தொடரையாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இலங்கை அணி.

இந்திய அணியைப் பொருத்த வரையில் கேப்டன் ரோஹித் சர்மா - லோகேஷ் ராகுல் கூட்டணி பேட்டிங்கை தொடங்கலாம். மிடில் மற்றும் லோயர் ஆர்டரில் தோனி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் களம் காணலாம்.

இவர்களைத் தவிர பேட்டிங்கில் ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் ஆகியோர் உறுதுணையாக இருப்பர்.

பந்துவீச்சை பொருத்த வரையில் ஜெயதேவ் உனத்கட், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், பாசில் தாம்பி, தீபக் ஹூடா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

அணியின் வேகப்பந்துவீச்சை ஜஸ்பிரீத் பும்ராவும், சுழற்பந்துவீச்சுக்கு குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹலும் உள்ளனர்.

மறுபுறம், திசர பெரேரா தலைமையிலான இலங்கை அணியின் பேட்டிங்கில் உபுல் தரங்கா, ஏஞ்ஜெலோ மேத்யூஸ் சிறப்பாக செயல்படலாம். நிரோஷன் டிக்வெல்லா அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வாய்ப்புள்ளது. அணியின் பந்துவீச்சுக்கு சுரங்கா லக்மல், நுவான் பிரதீப் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர்.

இந்தியா அணியின் விவரம்

ரோஹித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், பாசில் தாம்பி, ஜெயதேவ் உனத்கட்.

இலங்கை அணியின் விவரம்

திசர பெரேரா (கேப்டன்), உபுல் தரங்கா, ஏஞ்ஜெலோ மேத்யூஸ், குசல் பெரேரா, தனுஷ்கா குணதிலகா, நிரோஷன் டிக்வெல்லா, அசெலா குணரத்னே, சதீரா சமரவிக்ரமா, டாசன் சனகா, சதுரங்கா டி சில்வா, சச்சித் பதிரானா, தனஞ்ஜெய டி சில்வா, நுவான் பிரதீப், விஷ்வா ஃபெர்னான்டோ, துஷ்மந்தா சமீரா.