India - Sri Lanka crash in second one day today Will India Retaliate?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் மொஹாலியில் இன்று நடைபெறவுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் இன்று நடைபெறவுள்ளது.
இமாசலப் பிரதேச மாநிலம், தர்மசாலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில், இந்திய அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது என்பதும், இலங்கையுடன் நடந்த மூன்று டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடிய கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலாவது ஒரு நாள் போட்டியில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆட்டத்திலும் வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்குகிறது இலங்கை.
கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் களம் காணும் இந்தியா இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் காணுகிறது.
இந்திய வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தினாலேயே கடந்த ஆட்டத்தில் சொற்ப ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததனர்.
அந்த ஆட்டத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டதாக தெரிவித்த ரோஹித் சர்மா இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காரணமாக இருப்பார்.
