In the fourth round Federer is moving
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் 3-ஆவது சுற்றில், ஆர்ஜெண்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவை எதிர்கொண்ட ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து அவர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்னொரு ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து வீரரான ஸ்டான் வாவ்ரிங்கா, துனிசியாவின் மாலெக் ஜாஸிரியை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் சாம் கெர்ரிக்கு எதிரான ஆட்டத்தில், 3-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பெளதிஸ்டா அகுட் வென்றார்.
அதேபோன்று, மகளிர் ஒற்றையர் பிரிவு 4-ஆவது சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர், ஜப்பானின் ரிஸா ஒஸாகியை 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தார்.
இன்னொரு ஆட்டத்தில், ரஷியாவின் ஸ்வெட்லனா குஸ்நெட்சோவாவை 6-3, 7-6(4) என்ற செட் கணக்கில் வென்றார் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்.
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் கெர்பர் மற்றும் வீனஸ் மோத இருக்கின்றனர்.
