In the final round of the Asian Boxing Tournament Sumit Sangwan ...

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சிவ தாபா, சுமித் சங்வான் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டு அசத்தினர்.

ஆசிய குத்துச்சண்டை போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த மங்கோலியாவின் தூர்னியாம்பக்குடன் மோதினார் இந்தியாவின் சிவ தாபா. இதில், சிவதாபா, மரண அடி கொடுத்து தூர்னியாம்பக்கை வீழ்த்தினார்.

அடுத்ததாக இறுதிச் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் எல்னூர் அப்துராய்மூவுடன் மோதுகிறார் சிவ தாபா.

மற்றொரு ஆட்டத்தில் 91 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் தஜிகிஸ்தானின் குர்போனோவுடன் மோதி அவரை வீழ்த்தினார் இந்திய வீரரான சுமித் சங்வான்.