காமன்வெல்த் பாட்மின்டன் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்காட்லாந்தை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

அதன்படி, காமன்வெல்த் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் 2-0 என்ற செட்கணக்கில் ஜூலி பெர்சனை வீழ்த்தி வென்றார். 

அதேபோன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீ காந்த் 2-0 என்ற கணக்கில் கெய்ரன் மெரில்ஸையும் வென்றார். 

மற்றொரு பிரிவான பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை 2-0 என்ற கணக்கில் கிற்ஸ்டி கில்மர் - எலியனோர் இணையை வென்றது.

அதேபோன்று ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை 2-0 என்ற கணக்கில் பாட்ரிக் மெக்ஹக் - ஆடம் ஹால் இணையை வென்றது. 

இன்னொரு பிரிவான கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் சோப்ரா - சிக்கி ரெட்டி இணை 2-0 என்ற கணக்கில் மெக்பெர்சன் - மார்ட்டின் காம்பெல் இணையை வென்றது.