In the Asian squash championship tournament

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், ஹரிந்தர் பால் சாந்து, சுனன்யா குருவில்லா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றிற்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

பத்தொன்பதாவது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்றுத் தொடங்கியது.

ஆடவர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், ஈரானின் சோஹைல் ஷாமெலி மோதினர்.

இதில், 11-1, 11-5, 11-5 என்ற செட் கணக்கில் ஹாமெலியை வீழ்த்தினார் வேலவன்.

மற்றொரு இந்தியரான ஹரிந்தர் பால் சாந்து, பிலிப்பின்ஸின் ரெய்மார்க் பெகோர்னியாவுடன் மோதினா.

இதில், பெர்கானியாவை 11-1, 11-5, 11-4 என்ற செட் கணக்கில் ஹரிந்தர் வீழ்த்தினார்.

மகளிர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் இந்தியாவின் சுனன்யா குருவில்லா, 11-4, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் கொரியாவின் கோ யுராவை வீழ்த்தினார்.