ஹைதராபாத்தில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த 38 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் விளையாட்டின் மீது இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து பள்ளி, கல்லூர், அலுவலகம் சென்று வந்த போது விளையாடுவதை பலரும் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் ஹைதரபாத்தில் லால்பேட் பகுதியில் உள்ள பேராசிரியர் ஜெய்சங்கர் உள்விளையாட்டு அரங்கத்தில் 38 வயது இளைஞர் ஒருவர் நேற்று இரவு 7.20 மணியளவில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மயங்கி விழுந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவருக்கு சுவாசம் இருக்கிறதா என்று சோதித்து பார்த்துள்ளனர். இதையடுத்து அவர் அருகிலுள்ள காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்தாக தெரிவித்துள்ளனர்.
கண்ணாமூச்சி விளையாடும் சிறுத்தையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? சச்சின் வெளியிட்ட சிறுத்தை வீடியோ!
தினந்தோறும் அலுவலகம் முடித்து வீட்டிற்கு வரும் வழியில் பேட்மிண்டன் விளையாடி விட்டு வருவதை ஷியாம் யாதவ் வாடிக்கையாக கொண்டுள்ளார். அப்படித்தான் அவர் நேற்றும் விளையாட சென்றுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உன் குத்தமா, என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல - ஆஸி., சுழலுக்கு சிக்கி சின்னா பின்னமான இந்தியா!
Also Read This: முதல் பந்திலேயே ரோகித் சர்மா கேட்ச், அம்பயரும் அவுட் கொடுக்கல - ரெவியூ கேட்காமல் கோட்டை விட்ட ஆஸ்திரேலியா!
இது தொடர்பான வீடியோ ஒன்றை என்டிடிவி பத்திரிக்கையாளர் உமா சுதிர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
