In all the innings I will not change my retirement - UNISCON Action

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் தனது முடிவை, அனைத்து இன்னிங்ஸ்களிலும் சதமடித்தாலும்கூட திரும்பப் பெறும் எண்ணமில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரோடு யூனிஸ் கான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

“பாகிஸ்தான் அணியின் நலனுக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுவேன்” என யூனிஸ்கான் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

அதுபற்றி அவரிடம் கேட்டதற்கு அது முற்றிலும் தவறு என்று மறுத்துள்ளார் யூனிஸ்கான்.

"எனது ஓய்வு முடிவு குறித்து ஏராளமான வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. யூனிஸ் கான் தொடர்ந்து விளையாட விரும்புகிறார் என்றெல்லாம் பரப்புகிறார்கள். அதில் உண்மையில்லை. ஓய்வு பெறுவது என்ற முடிவை நான் சுயமாகவே எடுத்திருக்கிறேன்.

மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் அனைத்து இன்னிங்ஸ்களிலும் சதமடித்தாலும்கூட, எனது ஓய்வு முடிவில் மாற்றம் இருக்காது. நான் ஏற்கெனவே அறிவித்தபடி மேற்கிந்தியத் தீவுகள் தொடரோடு ஓய்வு பெறுவேன்' என அதிரடியாக தெரிவித்துள்ளார்.