imrah tahir tamil tweet about dhoni batting
ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு களமிறங்கிய சென்னை அணி, 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை அணி தக்கவைக்கவில்லை. அவருக்கு பதிலாக ஹர்பஜன் சிங்கை ஏலத்தில் எடுத்தது. அதேபோல் தென்னாப்பிரிக்க அணியின் சுழல் நாயகன் இம்ரான் தாஹிரையும் சென்னை அணி எடுத்தது.
சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டதிலிருந்தே ஹர்பஜன் சிங்கும், இம்ரான் தாஹிரும் டுவிட்டரில் தமிழில் டுவீட் போட்டு கலக்கி வருகின்றனர். இவர்களது அட்மின்கள் யார் என்பதை பார்த்துவிட துடிக்கும் அளவிற்கு டுவீட் போட்டு வருகின்றனர்.
பெங்களூருவுக்கு எதிரான நேற்றைய போட்டியில், கேப்டன் தோனியின் அதிரடி பேட்டிங்கால், 206 என்ற கடின இலக்கை எட்டி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து தோனியின் அதிரடி ஆட்டம் தொடர்பாக இம்ரான் தாஹிர், டுவிட்டரில் தமிழில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். சிங்கம் படத்தில் சூர்யா பேசும் வசனம் போல, தோனியை புகழ்ந்து அந்த பதிவு இடப்பட்டுள்ளது.
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="et" dir="ltr">Kattula vettayadara singham pathiruppa kakkisattai potta singham pathiruppa manja sattai potta mahendra singham pathurukkiya ? Oongi adicha 110meter dhooram 6 da pakkaraya ? Ithu posukkara kootam konjam thalli nillu kanna <a href="https://twitter.com/hashtag/eduda?src=hash&ref_src=twsrc%5Etfw">#eduda</a> vandiya poduda whistle <a href="https://twitter.com/ChennaiIPL?ref_src=twsrc%5Etfw">@ChennaiIPL</a></p>— Imran Tahir (@ImranTahirSA) <a href="https://twitter.com/ImranTahirSA/status/989217957430616064?ref_src=twsrc%5Etfw">April 25, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
அந்த பதிவில், காட்டுல வேட்டையாடுற சிங்கம் பாத்துருப்ப.. காக்கி சட்டை போட்ட சிங்கம் பாத்துருப்ப.. மஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கம் பாத்துருக்கியா..? ஓங்கி அடிச்சா 110 மீட்டர் சிக்ஸ்டா.. பாக்குறியா? இது பொசுக்குற கூட்டம், கொஞ்சம் தள்ளி நில்லுடா கண்ணா.. எடுடா வண்டிய, போடுடா விசில என பதிவிடப்பட்டுள்ளது.
