icc world cup women criket ...india enter to semi final



இங்கிலாந்து மற்றும் வேல்சி்ல் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்  நடைபெற்று வருகிறது.. நேற்று டெர்பியில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.டாஸ்  வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி பேட்டிங்  தேர்வு செய்தார். இந்திய அணியில் மோனா மேஷ்ராம் நீக்கப்பட்டு வேதா கிருஷ்ணமூர்த்தி வாய்ப்பு பெற்றார்.

பூனம் ராவுத், மந்தனா இருவரும் இன்னிங்சை தொடங்கினர். மந்தனா 8 ரன்னில் பெவிலியன் திரும்ப, இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அடுத்து பூனம் ராவுத் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க  தீப்தி பொறுப்புடன் விளையாடி 78 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து கேப்டன் மிதாலி ராஜ் பொறுப்பாக 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க  இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாறினாலும் மனோதாரா பொறுப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.

இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இந்திய அணியில் பூனம் ராவுத், கோஸ்வாமி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.