- Home
- Sports
- Rohit Sharma Net Worth: ரூ.50 கோச்சிங் ஃபீஸ் முதல் கோடிகள் வரை.. ஹிட்மேன் ரோஹித் சர்மாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?
Rohit Sharma Net Worth: ரூ.50 கோச்சிங் ஃபீஸ் முதல் கோடிகள் வரை.. ஹிட்மேன் ரோஹித் சர்மாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?
Rohit Sharma Net Worth: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்மேன்களில் ஒருவரான ரோஹித் சர்மா, உலக கிரிக்கெட்டில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். இன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

ரோஹித் சர்மாவின் சொத்து மதிப்பு
ஒரு காலத்தில் வெறும் 50 ரூபாய் கோச்சிங் கட்டணம் செலுத்தவே கஷ்டப்பட்ட ஒரு சாதாரண சிறுவன், இன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக, நாட்டின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார். அவர்தான் ஹிட்மேன் ரோஹித் சர்மா. தற்போதைய நிலவரப்படி, ரோஹித் சர்மாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.214 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பிசிசிஐ ஒப்பந்தம், ஐபிஎல் வருமானம், பிராண்ட் எண்டார்ஸ்மென்ட்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் மூலம் இந்த நிலையை அவர் அடைந்துள்ளார்.
ரூ.30 கோடிக்கு பிரம்மாண்ட வீடு
மும்பையின் மிகவும் காஸ்ட்லியான வொர்லி பகுதியில் உள்ள 'அஹுஜா டவர்ஸ்' அடுக்குமாடி குடியிருப்பின் 29வது மாடியில் ரோஹித் சர்மா வசிக்கிறார். இந்த 4-BHK அபார்ட்மெண்ட்டின் மதிப்பு சுமார் ரூ.30 கோடி. 6,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த வீட்டிலிருந்து அரபிக்கடலை 270 டிகிரி கோணத்தில் பார்க்கலாம். நியூயார்க்கை சேர்ந்த வில்சன் அசோசியேட்ஸ் மற்றும் சிங்கப்பூரின் பாமர் & டர்னர் நிறுவனங்கள் இந்த டவரை வடிவமைத்துள்ளன. இதே பகுதியில்தான் விராட் கோலி, யுவராஜ் சிங் போன்ற பிரபலங்களும் வசிக்கின்றனர்.
ஹிட்மேனின் கார் கலெக்ஷன்
ரோஹித் சர்மாவுக்கு கார்கள் மீது அலாதி பிரியம். அவரின் கராஜில் ரூ.4.18 கோடி மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் கார் தனித்துவமாக நிற்கிறது. ஒருநாள் போட்டியில் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோரான 264 ரன்களைக் குறிக்கும் வகையில், இந்த காரின் நம்பர் பிளேட் '0264' ஆகும். இதுதவிர, மெர்சிடஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ, ரேஞ்ச் ரோவர் போன்ற பல சொகுசு கார்களும் அவரிடம் உள்ளன. மேலும், ரூ.41 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச்சையும் அவர் அணிகிறார்.
ரித்திகாவுடனான காதல்
ரோஹித் சர்மாவும், ரித்திகா சஜ்தேவும் திருமணத்திற்கு முன்பு நல்ல நண்பர்கள். ஸ்போர்ட்ஸ் மேனேஜராக இருந்த ரித்திகாவை, தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய போரிவலி ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் வைத்து ரோஹித் காதலை வெளிப்படுத்தினார். வொர்லி வீட்டைத் தவிர, லோயர் பரேலில் தனது தந்தை குருநாத் சர்மாவுடன் இணைந்து இரண்டு அபார்ட்மெண்ட்களை வாங்கியுள்ளார். மேலும், டிசம்பர் 2025-ல் ரித்திகா சஜ்தே மும்பையின் பிரபாதேவி பகுதியில் ரூ.26.30 கோடிக்கு ஒரு சொகுசு அபார்ட்மெண்ட்டை வாங்கியுள்ளார்.
கிரிக்கெட்டை தாண்டிய ரோஹித்தின் மறுபக்கம்
கிரிக்கெட் வருமானம் மட்டுமின்றி, 'CricKingdom' என்ற கிரிக்கெட் அகாடமி மூலமும் ரோஹித் சர்மா இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். இவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும், விலங்குகள் நலனிலும் அவர் அதிக அக்கறை காட்டுகிறார். PETA அமைப்புடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும், WWF இந்தியா அமைப்பின் காண்டாமிருக தூதராகவும் செயல்படுகிறார். ரூ.50-க்கு கஷ்டப்பட்ட நிலையில் இருந்து, இன்று ரூ.214 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரோஹித்தின் பயணம் பலருக்கும் ஒரு உத்வேகம்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

