ICC rankings rankings Koli

ஐசிசி தரவரிசையின் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்தியாவின் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையின் பேட்ஸ்மேன்கள் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபிஞ்ச் 2-வது இடத்தில் உள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளின் எவின் லீவிஸ் 3-வது இடத்துக்கு வந்துள்ளார். இது அவரது தரவரிசை வரலாற்றில் முதல் முறையாகும்.

பாகிஸ்தானின் பாபர் ஆஸம் 21 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி தரவரிசையின் பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பூம்ரா ஓரிடம் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

முதலிடத்தில் பாகிஸ்தானின் இமத் வாஸிம் உள்ளார்.

3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் உள்ளனர்.

இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 10-வது இடத்தில் நீடிக்கிறார்.

ஐசிசி தரவரிசையில் அணிகளுக்கான பட்டியலில், இந்தியா 5-வது இடத்தில் நீடிக்கிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி ஓரிடம் முன்னேறி 3-வது இடத்திற்கு வந்துள்ளது.

இங்கிலாந்து 2-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு சென்றுள்ளது.