ICC elected virat kohli as a best cricket player of the year
2017ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமகால கிரிக்கெட்டில் யார் சிறந்த வீரர் என்பதில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒருவரை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவிற்கு இருவரும் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.
கோலியும் ஸ்மித்தும் அபாரமான திறமை வாய்ந்தவர்கள் என முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருவரில் ஒருவரை மட்டும் சொல்ல சொன்னால், ஸ்மித்தை விட கோலியை சிறந்த வீரர் என்பேன் என ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார்.
அந்த அளவிற்கு விராட் கோலியும் ஸ்டீவ் ஸ்மித்தும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவதோடு சாதனைகளையும் குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 2017ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலியை ஐசிசி தேர்வு செய்துள்ளது. சிறந்த ஒருநாள் வீரராகவும் கோலியே தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த டெஸ்ட் வீரராக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி, சிறந்த வீரராக ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய கௌரவம் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
