தென்னாப்பிரிக்க அணியின் மிரட்டல் பவுலராக வலம் வருகிறார் ரபாடா. டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி, பல முன்னாள் ஜாம்பவான்கள் செய்யாத சாதனைகளை எல்லாம் கூட மிகவும் எளிதாக செய்துவருகிறார். ஆனால் அவரது ஆக்ரோஷத்தால் அவர் மீதான எதிர்மறை கருத்துகளும் அதனால் ஏற்படும் விளைவுகளும் அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு கடும் பாதிப்பாக உள்ளது. அதை தற்பொழுதுதான் ரபாடா உணர்ந்துள்ளார்.

அண்மையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிரட்டலாக பந்துவீசி விக்கெட்டுகளை குவித்தார் ரபாடா. டெஸ்ட் போட்டிகளில் சிறந்த அணியான இந்திய அணியின் விக்கெட்டுகளை மிகவும் எளிதாக வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

22 வயது மட்டுமே ஆன ரபாடா, 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 4வது முறையாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துள்ளார். 23 வயதுக்குள்ளாகவே 4 முறை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் சாதனையையும் சமன் செய்துள்ளார் ரபாடா. இதன் மூலம் கிளென் மெக்ராத், ஆண்டர்சன், ஆலன் டோனல்ட், வால்ஷ், ஆம்புரோஸ் போன்ற மேதை வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளார் ரபாடா.

கபில்தேவ் இருமுறைதான் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஷான் போலாக் ஒருமுறை கைப்பற்ற, பிரெட் லீ, மோர்னே மோர்கல் ஆகிய வீரர்கள் ஒருமுறை கூட ஒரே டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை.

இப்படி சிறந்த வீரராக வலம்வரும் ரபாடா, ஆக்ரோஷத்தாலும் எதிரணியினருடனான எதிர்மறை அணுகுமுறையாலும் கடும் விளைவுகளை சந்தித்துவருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில்,  ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்திய ரபாடா, ஸ்மித்தின் தோளில் இடித்து அளவுகடந்த ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/SAvAUS?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SAvAUS</a> This nudge between Rabada and Smith will no doubt be reviewed by the match referee <a href="https://t.co/2ln0tmTOln">pic.twitter.com/2ln0tmTOln</a></p>&mdash; Michael Sherman (@Golfhackno1) <a href="https://twitter.com/Golfhackno1/status/972089842237607936?ref_src=twsrc%5Etfw">March 9, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

வம்புக்கு இழுக்கும் விதமாக அத்துமீறி செயல்பட்டார் ரபாடா. ஐசிசி விதிகளை மீறி செயல்பட்டதால், இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட ரபாடாவிற்கு ஐசிசி தடைவிதித்துள்ளது. ரபாடாவின் நீக்கம் தென்னாப்பிரிக்க அணிக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரபாடா, எனக்கும் என் அணிக்கும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டேன். இதை ஒரு பாடமாக கருதுகிறேன். மிகவும் வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.