I will commit suicide if I do not choose me in the Olympic Games - the athlete sadness ...
பாரா ஒலிம்பிக் போட்டியில் தனது பெயரை சேர்க்காவிட்டால் இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பாரா பளுதூக்கும் வீராங்கணை சாகினா காதூன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 2018-ஆம் ஆண்டின் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் பாரா பளுதூக்கும் வீராங்கணை சாகினா காதூன் சேர்க்கப்படவில்லை.
இதுகுறித்து பாரா பளுதூக்கும் வீராங்கணை சாகினா காதூன், "தனது பெயர் பார ஒலிம்பிக் போட்டிக்கு பரிசீலிக்கப்படவில்லை என்றால் இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன் தற்கொலை செய்து கொள்வேன்.
என் பெயரை இன்னும் பட்டியலில் சேர்க்கும் வரை காத்திருக்கிறேன். நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். நான் கடைசி வரை போராடுவேன், பிறகு என் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால், நான் நீதிமன்றத்திற்கு செல்வேன். ஏன் என்றால் அவர்கள் என் வாழ்க்கையை பாழாக்கி விட்டனர். நான் இதை விட்டுவிட மாட்டேன்.
இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன்னால் தற்கொலை கூட செய்து கொள்வேன். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த விளையாட்டுகளுக்கு நான் காத்திருக்கிறேன். இதனால் நான் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறேன். இதற்காக நான் மிகவும் கடினமாக பயிற்சி செய்தேன்" என்று வருத்தத்துடன் கூறினார்.
காமன் வெல்த் போட்டியில் தனது பெயரை சேர்த்துக் கொள்ள இந்தியாவின் பாரா ஒலிம்பிக் கமிட்டிக்கு ஒரு கடிதத்தையும் அவர் எழுதியுள்ளார். பாரா ஒலிம்பிக் கமிட்டியும் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு சாகினாவை சேர்த்து கொள்ள பரிந்துரைத்துள்ளது. ஆனால், இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
28 வயதாகும் சாகினா காதூன் காமன் வெல்த் போட்டியில் லைட் வெயிட் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
