I thought I could win and break the prediction of the Malaysian Open Bre Lin Dan

மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் நான் வெற்றிப் பெற மாட்டேன் என்ற கணிப்பை உடைக்க நினைத்தேன். அதேபோன்று உடைத்து வெற்றிப் பெற்றேன் என்று இப்போட்டியில் சாம்பியன் வென்ற லின் டான் பேசினார்.

மலேசியாவின் குச்சிங் நகரில் மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் சீனாவின் லின் டான் மற்றும் மலேசியாவின் லீ சாங் மோதினார்.

இதில், 21-19, 21-14 என்ற நேர் செட்களில் மலேசியாவின் லீ சாங் வெய்யை சீனாவின் லின் டான் வீழ்த்தினார்.

முதன்முறையாக மலேசிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற லின் டான், சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து பெரிய போட்டிகளிலும் வாகை சூடியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

வெற்றி குறித்து லின் டான் பேசியது:

"மலேசிய ஓபனில் லின் டான் பட்டம் வெல்ல முடியாது என்ற கணிப்பை உடைக்க வேண்டும் என்பதே எனது முதல் இலக்காக இருந்தது. இப்போது அதை உடைத்துவிட்டேன். நாங்கள் இருவருமே நன்றாக ஆடினோம். உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்' என்றார்.