I made a big mistake tears of smith

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து ஸ்டீவன் ஸ்மித் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்பதை இப்போது உணர்கிறேன் என ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பந்தை சேதப்படுத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்மித் நீக்கப்பட்டார். இப்போது அவரும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கேப்டனாக விளையாட இருந்த வார்னரும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது. 

ஆஸ்திரேலிய தலைமை கிரிக்கெட் அமைப்பான கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் ஸ்மித், வார்னர் மற்றும் பந்தை சேதப்படுத்திய பான்கிராஃப்ட் ஆகியோர் மீது நேற்று தடை நடவடிக்கை மேற்கொண்டது. 

அதன்படி, கேப்டனாக இருந்த ஸ்மித், துணை கேப்டனாக இருந்த வார்னர் ஆகியோர் ஓராண்டுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து ஸ்டீவன் ஸ்மித் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்பதை இப்போது உணர்கிறேன் என ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.