எனது மல்யுத்த வாழ்க்கை வரலாற்றை எவரும் படமாக்க விரும்பினால் அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சுல்தான், டங்கல் என மல்யுத்தம் தொடர்புடைய படங்கள் சமீபத்தில் வெளிவந்து சக்கைப் போடு போட்டன.

இதனையடுத்து ரியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்கின் கதையும் படமாக்கப்படுமா என்று அவரிடம் கேட்டனர்.

இதற்கு சாக்‌ஷி மாலிக், “மல்யுத்தப் போட்டி குறித்து ஏற்கெனவே "சுல்தான்' படம் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அதே கதையம்சத்துடன் "டங்கல்' படம் திரைக்கு வந்துள்ளது நல்ல விஷயமாகும்.

எனது மல்யுத்த வாழ்க்கை வரலாற்றை எவரும் படமாக்க விரும்பினால் அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

என் வேடத்தில் எந்த நடிகை நடிக்கலாம் என்பது குறித்து நான் இன்னும் யோசிக்கவில்லை.

என் வாழ்க்கை வரலாற்றுப் படத்தினால் நாட்டில் மல்யுத்த விளையாட்டு பிரபலமாகும் என்றால் எனக்கு ஆட்சேபனை இல்லை என்று சாக்‌ஷி மாலிக் பதிலளித்தார்.