சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் இரண்டு இடங்கள் முன்னேறி 15-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் வாகைச் சூடினார், ஆக்லாந்து ஓபனில் காலிறுதி வரை முன்னேறினார் போன்றவற்றின் அடிப்படையில் எச்.எஸ்.பிரணாய் இரண்டு இடங்கள் முன்னேறி 15-வது இடத்தைப் பிடித்து தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளார்.

இந்தியாவின் செளரவ் வர்மா ஐந்து இடங்கள் முன்னேறி 32-வது இடத்தையும், காஷ்யப் ஓர் இடம் முன்னேறி 46-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் தொடர்ந்து 8-வது இடத்திலேயே இருக்கிறார்.

அஜய் ஜெயராம் 17-வது இடத்திலும், சமீர் வர்மா 29-வது இடத்திலும் உள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் இந்தியாவின் பி.வி.சிந்து ஐந்தாவது இடத்திலும், சாய்னா நெவால் 16-வது இடத்திலும் உள்ளனர்.

மகளிர் இரட்டையர் தரவரிசையில் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை 25-வது இடத்தில் உள்ளது.

கலப்பு இரட்டையர் தரவரிசையில் பிரணவ் சோப்ரா - சிக்கி ரெட்டி இணை தொடர்ந்து 20-வது இடத்தில் உள்ளது.