Hpetrar win for the third time Poor Nadal failed this time
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ஃபெடரர் நடாலை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் வென்றார். ஆனால், ஐந்தாவது முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்த நடால் இந்த முறையும் தோல்வி அடைந்தார்.
அமெரிக்காவின் மியாமி நகரில் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் நடாலை வீழ்த்தி வாகைச் சூடினார்.
வெற்றிப் பெற்ற ஃபெடரர் மியாமி ஓபன் பட்டத்தை மூன்றாவது முறையாகக் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மியாமி மாஸ்டர்ஸ் போட்டியில் ஐந்தாவது முறையாக இறுதிச் சுற்றிற்கு முன்னேறிய நடால் இதுவரை இங்கு பட்டம் வெல்லவில்லை என்பது சோகமான ஒன்று.
இந்த ஆண்டில் இவர்கள் இருவரும் மோதிய இரண்டாவது இறுதிச்சுற்று இதுவாகும்.
இதற்கு முன் கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச் சுற்றில் ஃபெடரரும், நடாலும் மோதியதிலும் ஃபெடரர்தான் வெற்றிப் பெற்றார்.
ஒட்டு மொத்தத்தில் நடாலும், ஃபெடரரும் நேருக்கு நேர் மோதிய 37-வது ஆட்டம் இது. இதில் ஃபெடரர் 14 முறையும் நடால் 23 முறையும் வென்றுள்ளனர்.
மியாமி பட்டம் ஃபெடரரின் 91-வது பட்டம். தரவரிசையில் நான்காம் இடத்தில் இருக்கும் ஃபெடரர், முதல் இடத்தைப் பிடிப்பதே தனது லட்சியம் என்று தெரிவித்தார்.
