ஓட்டலில் இருந்து கிரிக்கெட்வீரர்கள் எஸ்கேப் ஆனது எப்படி தெரியுமா..? சுவாரஸ்ய  தகவல்..!

இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன்  கொல்கத்தா அணி மோத உள்ளது.

இந்த நிலையில், தமிழகம் முழவதும் இருந்து ஐபிஎல் போட்டிகள் நடைபெற கூடாது என  மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் நோக்கில் பல கட்சியினர் போராட்டம் நடத்தி  வருகின்றனர்.

இந்நிலையில்,சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரர்கள்,சென்னை அடையாரில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் தங்கி இருந்தனர்.

இதே போன்று எழும்பூர் நட்சத்திர ஓட்டலில் கொல்கத்தா அணி வீரர்கள் தங்கி இருந்தார்.

வலுக்கும் போராட்டம் இதற்கிடையே, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அண்ணா சாலையில் போராட்டன் நடத்தினர்.

அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும், நாம் தமிழர் கட்சி சீமான், இயக்குனர்  கௌதமன், இயக்குனர் பாரதி ராஜா உள்ளிட்டோரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது  செய்யப்பட்டனர்

சரி இப்ப csk  வீர்ர்கள் எப்படி எஸ்கேப் ஆனார்கள் என பார்க்கலாம்...

இன்று மாலை 4  மணி முதலே, தொலைக்காட்சி நிருபவர்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் அடையாறு நட்சத்திர ஓட்டலின் முன்பக்க வாசல் வழியாக காத்திருந்தனர் வீரர்களின் வருகைக்காக....

ஆனால் சரியாக 6 மணி அளவில்,முழுவதும் கவர் செய்யப் பட்ட அப்போலோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் வீர்ர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

சாதரணமாக அழைத்து செல்லப்பட்டதால்,யாருக்கும் சந்தேகம் வரவில்லை..அதே  வேளையில்,வீர்ர்களை அழைத்து செல்வதற்காக ஏற்கனவே ஒரு பேருந்து அங்கு தயார்  நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு பூச்சாண்டி காண்பிக்கப்பட்டு வந்தது.

இதனை நம்பி அங்கேயே காத்திருந்த ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாருக்கும் பயங்கர ஷாக்கான நியூஸ் கிடைத்தது....

அதாவது அண்ணா சாலையில் ஆம்புலன்சில் வந்த வீரர்களை போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் மடக்கியதாக தெரியவனதது ..

இதனை கண்டு பயந்த  ஓட்டுனர் வண்டியை விட்டு இறங்கி ஒரே ஓட்டம் பிடித்துள்ளார்..

பின்னர் பொலிசாரின் தீவிர முயற்சியின் விளைவாக வீரர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல், சேப்பாக்கம் மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.