Hong Kong Open 51 minutes to defeat the opponent

ஹாங்காங் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா இரண்டாவது சுற்றுக்கு அதிரடியாக முன்னேறினார்.

ஹாங்காங் ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் தொடக்க நாளான நேற்று முதல் இந்தியராக ஜோஷ்னா சின்னப்பா களம் புகுந்தார்.

இவர் தனது முதல் சுற்றில் தகுதிச்சுற்று வீராங்கனையான கனடாவின் ஹோலி நாட்டனை எதிர்கொண்டார்.

அதில், ஜோஷ்னா, 11-5, 8-11, 11-5, 8-11, 11-6 என்ற செட் கணக்கில் 51 நிமிடத்தில் வெற்றிப் பெற்றார்.

போட்டித் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் ஜோஷ்னா சின்னப்பா, தனது அடுத்த சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருக்கும் எகிப்தின் நெளரான் கோஹரை எதிர்கொள்கிறார்.