Asianet News TamilAsianet News Tamil

ஹாக்கி போட்டி: 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா...

Hockey Match India dropped to Belgium in the 2nd match
Hockey Match India dropped to Belgium in the 2nd match
Author
First Published Jan 19, 2018, 10:53 AM IST


நான்கு நாடுகள் பங்கேற்றுள்ள ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது.

4 நாடுகள் பங்கேற்றுள்ள ஹாக்கி போட்டியில் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெல்ஜியம் அணி முதல் மற்றும் 2-வது பாதியில் தலா ஒரு கோல் அடிக்க, இந்தியாவுக்கு கிடைத்த 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகளுமே பொய்த்தது.

ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் கோல் முயற்சியை திறமையாகக் கையாண்டு தடுத்தார் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்.  எனினும், 8-வது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் செபாஸ்டியன் டாக்கீர், ரிவர்ஸ் ஷாட் முறையில் அடித்த பந்தை ஸ்ரீஜேஷ் தவறவிட, பெல்ஜியம் முன்னிலை பெற்றது.

12-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு ரமன்தீப் சிங் மூலமாக கிடைத்த முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பு கோலடிக்க இயலாமல் வீணானது.  தொடர்ந்து 22-வது நிமிடத்தில் அர்மான், விவேக், மன்தீப் முயற்சியில் 2-ஆவது பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றது இந்தியா.

ஹர்மன்பிரீத் சிங் டிராக்ஃப்ளிக் செய்த பந்தை, பெல்ஜிய வீரர் மிகச் சரியாகத் தடுக்க, அந்த வாய்ப்பும் பறிபோனது. அடுத்த சில நிமிடங்களில் கோல் போஸ்ட்டை நோக்கி ரமன்தீப் சிங் அடித்த பந்து, சிறிய இடைவெளியில் வெளியே சென்று ஏமாற்றமளித்தது.

இவ்வாறாக முதல் பாதியில் பெல்ஜியம் 1-0 என முன்னிலையில் இருந்தது. 2-வது பாதியில் 34-வது நிமிடத்தில் இந்திய தடுப்பாட்டத்தை தகர்த்த பெல்ஜிய வீரர் விக்டன் வெக்னஸ், அணியின் கோல் கணக்கை 2-ஆக உயர்த்தினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் விவேக் சாகர் பிரசாத், ரமன்தீப் சிங் ஆகியோரின் பெனால்டி கார்னர் முயற்சிகலும் வீணாக, இறுதியில் பெல்ஜியம் வென்றது.

இந்தியா நாளை தனது 3-வது ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios