Hockey India beat England to qualify for the semi-finals

காமன்வெல்த் ஹாக்கி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி அரையிறுதியிக்கு தகுதி பெற்றுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். 

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வென்று குவித்து வருகின்றது.

காமன்வெல்த் ஆடவர் ஹாக்கியில் இந்தியா அணி தனது கடைசி குழுப் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை நேற்று எதிர்கொண்டது. 

கடும் போட்டி நிலவிய நிலையில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் முனனிலை பெற்றிருந்தது. போட்டி முடிவதற்கு கடைசி இரண்டு நிமிடங்களுக்கு முன்பு பெனால்டி கார்னர் மூலம் கோலடித்ததில் 3-3 என்ற சமநிலை ஏற்பட்டது. அதன்பின் கேப்டன் மன்பீரித் சிங் கடத்தித் தந்த பந்தை மந்தீப் சிங் கோலாக மாற்றினார். 

ஏற்கெனவே அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்று விட்டது. கடைசி ஆட்டத்தில் வென்றதின் மூலம் பி பிரிவில் இந்தியா முதலிடம் பெற்றது. இதன்மூலம் ஏ பிரிவில் 2-ஆம் இடம் பெற்ற நியூஜிலாந்தை எதிர்கொள்கிறது.