பின்கள வீராங்கனை சுனிதா லகரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த சுஷீலா சானுவுக்கு 18 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டி சிங்கப்பூரில் வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா தவிர, நடப்பு சாம்பியனான ஜப்பான், சீனா, தென் கொரியா, மலேசியா ஆகிய அணிகளும் பங்கேற்கின்றன.

இது குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் நீல் ஹேக்வுட், "ரியோ ஒலிம்பிக் போட்டி, இந்திய அணிக்கு சிறப்பான ஒன்றாக அமைந்தது. இப்போது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக மிகுந்த நம்பிக்கையோடு இந்திய வீராங்கனைகள் காத்திருக்கிறார்கள்' என்று கூறினார்.

அணி விவரம்:

கோல் கீப்பர்கள்: சவீதா, ரஜானி எடிமார்பு. பின்களம்: தீப் கிரேஸ் இக்கா, ரேணுகா யாதவ், சுனிதா லகரா, ஹியாலம் லால் ரெளத் ஃபெலி, நமீதா டோப்போ. நடுகளம்: நிக்கி பிரதான், நவ்ஜோத் கெளர், மோனிகா, ராணி, தீபிகா, நவ்தீப் கெளர். முன்களம்: பூனம் ராணி, அனுராதா தேவி, வந்தனா கட்டாரியா, பிரீத்தி தூபே, பூனம் பர்லா.