history repeats in ipl csk vs rcb match
ஐபிஎல் 11வது சீசனின் 24வது போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் வரலாறு திரும்பியது.
நேற்றைய போட்டிக்கும் கடந்த 2012, ஏப்ரல் 12ம் தேதி நடந்த சென்னை-பெங்களூரு போட்டிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
பெங்களூருவில் நடந்த நேற்றைய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, டிவில்லியர்ஸின் அதிரடியான ஆட்டத்தால், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆடிய சென்னை அணி, தோனியின் அதிரடி ஆட்டம் மற்றும் ராயுடுவின் பொறுப்பான ஆட்டத்தால் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி நடந்த 13வது லீக் போட்டியில் சென்னையும் பெங்களூருவும் மோதின. இந்த போட்டியும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தான் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, அப்போது கெய்லின் அதிரடியால், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.
இலக்கை விரட்டிய சென்னை அணி, நேற்றை போலவே 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
கடந்த 2012ல் நடந்த சம்பவம் மீண்டும் அதேமாதிரி நேற்று நடந்துள்ளது. வரலாறு திரும்பியது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், அப்போது பெங்களூரு அணியின் கேப்டன் வெட்டோரி; இப்போது கோலி.
