He is a former player Ravi Shastri verkkatalaikkuc camamam two million

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஆண்டு ஊதியத்தை பிசிசிஐ அதிகரித்தது. அதில், ’ஏ' கிரேடு வீரர்களுக்கான ஊதியம் ரூ.2 கோடி உயர்த்தப்பட்டுள்ளது ஆனால், அந்த ரூ.2 கோடி வேர்க்கடலைக்குச் சமம் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை, பிசிசிஐ நிர்வாகக் குழு வெளியிட்டது.

இதன்படி, ’ஏ' கிரேடு வீரர்களுக்கான ஊதியம் ரூ.1 கோடியில் இருந்து, ரூ.2 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

அதேபோல், ’பி' கிரேடு வீரர்களுக்கான ஊதியம் ரூ.1 கோடியாகவும், ’சி' கிரேடு வீரர்களுக்கான ஊதியம் ரூ.50 ய்லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கான ஊதியம் ரூ.7.50 இலட்சத்தில் இருந்து, ரூ.15ஈலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிக்கான ஊதியம் ரூ.6 இலட்சமாகவும், டி20 போட்டிக்கான ஊதியம் ரூ.3 இலட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐயின் இந்த ஊதிய உயர்வை முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி ஒரு பேட்டியில் பின்வருமாறு கூறியுள்ளார்:

“இரண்டு கோடி என்பது ஒன்றுமில்லை; இரண்டு கோடி என்பது வேர்க் கடலைக்குச் சமம். டெஸ்ட் வீரர்களின் கிரேடு ஒப்பந்தம் உயர்வானதாக இருக்க வேண்டும். புஜாராவுக்கு உச்சபட்ச மதிப்பு அளிக்க வேண்டும். ஏ கிரேடு ஒப்பந்த வீரர்கள் அதிகச் சம்பளம் பெறவேண்டும். இருமடங்கு உயர்த்தப்பட்டாலும் இன்னும் அதிகமாகக் கொடுத்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.