இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி. 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. சொந்த மண்ணில் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, அதேபோலவே சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

இரண்டு டி20 போட்டிகளும் அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. முதல் டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ள நிலையில், உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இது என்பதால், இதில் வென்று அதே உத்வேகத்துடன் உலக கோப்பைக்கு செல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அந்நிய மண்ணிலேயே வெற்றிகளை குவித்து வரும் வலுவான இந்திய அணியை, சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. 
 
இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் பேட்ஸ்மேன் மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்புள்ள பவுலர் ஆகியோரை மேத்யூ ஹைடன் தேர்வு செய்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரில், இந்திய அணியின் பிரச்னையாக இருந்துவந்த 4ம் இடத்திற்கு தீர்வாக அமைந்த அம்பாதி ராயுடுதான் அதிகமான ரன் குவிக்கும் வீரராக இருப்பார் என்றும் குல்தீப் யாதவ் தான் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று ஹைடன் கணித்துள்ளார்.