ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்று சாதனை படைத்தது. அதன்பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வருகிறது ஆஸ்திரேலிய அணி. இரு அணிகளுக்கும் இடையே 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க உள்ளது. சொந்த மண்ணில் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, அதேபோலவே சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

வரும் 24ம் தேதி மற்றும் 27ம் தேதி ஆகிய தேதிகளில் இரண்டு டி20 போட்டிகள் நடக்கின்றன. அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. 

இந்நிலையில், இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேத்யூ ஹைடன், ஆஸ்திரேலியாவில் விராட் கோலியை ரிச்சர்ட்ஸன் மூன்று முறை வீழ்த்தியுள்ளார். ரிச்சர்ட்ஸனுக்கு எதிராக கோலி சற்று திணறினார். ஆஸ்திரேலியாவில் கோலியை ரிச்சர்ட்ஸன் வீழ்த்தியிருந்தாலும் இந்தியாவில் நிலைமையும் சூழலும் வேறு. எனவே ரிச்சர்ட்ஸன் இந்தியாவில் பந்துவீசிய அனுபவம் இல்லாத இளம் வீரர். எனவே அவர் மீது ஆதிக்கம் செலுத்தி கோலி ஆடக்கூடும். அதனால் சற்று உஷாராக இருக்க வேண்டும். பெஹ்ரெண்டோர்ஃப் நல்ல உயரமாக இருப்பதோடு நல்ல வேகமாகவும் வீசுகிறார். எனினும் இந்திய வீரர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் உஷாராக வீச வேண்டும் என்று ஹைடன் அறிவுறுத்தியுள்ளார்.