ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் அனுபவ வீரர் ஆசிம் ஆம்லா விடுவிக்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. 

இதற்கிடையே தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி வரும் நவம்பர் 4ம் தேதி தொடங்க உள்ளது. 

இந்நிலையில், இத்தொடரிலிருந்து ஆசிம் ஆம்லா விடுவிக்கப்பட்டுள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆடியபோது கைவிரலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரிலும் ஆம்லா ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஆடும் வாய்ப்பை எல்கார் பெற்றிருந்தார். 

இன்னும் காயம் குணமடையாததால் ஆம்லா ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் அனுபவ வீரரான ஆம்லா ஆடாதது அந்த அணிக்கு இழப்புதான். ஏற்கனவே டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஆம்லாவும் ஆடாதது தென்னாப்பிரிக்க அணிக்கு பேரிழப்பு தான்.