ஷிகர் தவானின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தவான் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என கிரிக்கெட் பத்திரிகையாளரும் வர்ணனையாளருமான ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியை தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் பெரும்பாலான இன்னிங்ஸ்களில் சரியாக ஆடவில்லை. அதிலும் தொடக்க வீரர்கள் அனைத்து போட்டியிலும் சொதப்பினர். ஒரு போட்டியில் கூட சரியாக ஆடாமல், 9 இன்னிங்ஸ்களில் வெறும் 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ராகுல், கடைசி இன்னிங்ஸில் சதமடித்து, அந்நிய மண்ணிலும் தன்னால் அடிக்க முடியும் என நிரூபித்தார். 

ஆனால் வெளிநாட்டு தொடர்களில் தொடர்ந்து சொதப்பிவரும் ஷிகர் தவான், இந்த தொடரிலும் சொதப்பினார். இரண்டாவது போட்டியில் மட்டும் ஆடாத தவான், எஞ்சிய 8 இன்னிங்ஸ்களில் சேர்த்தே வெறும் 162 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடைசி போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் 1 ரன்னும் எடுத்தார். 

இரண்டு போட்டிகளில் சரியாக ஆடாத முரளி விஜய், தொடரிலிருந்தே நீக்கப்பட்டார். ஆனால் கிடைத்த வாய்ப்பை தவான் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. பிரித்வி ஷா, மயன்க் அகர்வால் என தொடக்க வீரர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என கிரிக்கெட் பத்திரிகையாளரும் வர்ணனையாளருமான ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார். அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணி, அங்கு ஆடுவதற்கு தகுதியான வீரர்களை தேர்வு செய்யும் விதமாகத்தான் இந்தியாவில் நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும். ஷிகர் தவானுக்கு சேர்க்கப்பட வாய்ப்பில்லை என ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.