இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் வெற்றிக்கு அருகில் சென்றே அதிகமான போட்டிகளில் தோற்ற இந்திய அணி, இன்னும் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் எதிரொலியாக கேப்டன் விராட் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் என இந்திய அணி தொடர்ந்து இரண்டு முறை வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. 

இந்த தொடர் தோல்விக்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கேப்டன் விராட் கோலியும் பொறுப்பேற்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்துள்ளன. கேப்டன் விராட் கோலியின் கள வியூகம், பவுலர்களை பயன்படுத்தும் விதம் ஆகியவை குறித்து ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

அதேபோல கடந்த 15 ஆண்டுகளில் தற்போதைய இந்திய அணி தான், வெளிநாடுகளில் சிறப்பாக ஆடிவருகிறது என்ற ரவி சாஸ்திரியின் கருத்துக்கு, கங்குலி, கவாஸ்கர், சேவாக் ஆகிய முன்னாள் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்திருந்தனர். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் வெற்றிக்கு அருகில் சென்ற இந்திய அணி தோல்வியை தழுவியது. கடைசி போட்டியிலும் அதேதான் நடந்தது. வெற்றியின் விளிம்பில் தோல்வியை தழுவியது ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ஆலோசகர்கள் ஆகியோருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும்போது வெற்றிக்கனியை பறிப்பதுதான் சிறப்பாக இருக்கும். ஆனால் இந்திய வீரர்கள் ஜெயிக்க வேண்டிய போட்டிகளிலும் தோல்வியை தழுவும் அளவிற்கு மோசமாக விளையாடினர். அதன் எதிரொலியாக சரியாக ஆடாத வீரர்கள் மட்டுமல்லாமல் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் அணுகுமுறைகள் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் பத்திரிகையாளரும் வர்ணனையாளருமான ஹர்ஷா போக்ளே, இந்திய அணி வெற்றி பெற கிடைத்த வாய்ப்புகளை வெற்றியாக மாற்றவில்லை. 4-1 என தொடரை இழந்தது. இந்திய அணி இன்னும் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். தொடர்ச்சியாக இரண்டு வெளிநாட்டு தொடர்களை இழந்துள்ளோம் என ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார். 

தொடர்ச்சியாக இரண்டு வெளிநாட்டு தொடர்களை(தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து) இழந்துள்ளது குறித்து ஹர்ஷா குறிப்பிட்டிருப்பது வெளிநாடுகளில் தொடர் தோல்விக்கு மறைமுகமாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை சாடியிருக்கிறார். ரவி சாஸ்திரிக்கு அடுத்து இன்னும் இரண்டு சவால்கள் உள்ளன. ஆசிய கோப்பை, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் ஆகிய இரண்டும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் முன் இருக்கும் சவால்கள்.