Harmanpreet Kaur of India won the Best Bats women Award......

ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ-2017 விருதுகளில், சிறந்த பேட்ஸ் உமனுக்கான விருதை இந்தியாவின் ஹர்மன்பிரீத் கௌர் வென்றுள்ளார். அவரோடு இந்தியாவின் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோரும் விருது வென்றுள்ளனர்.

ஈஎஸ்பிஎன் கிரிக்கெட் விருதுகளுக்கு தகுதியானவர்களை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய 18 பேர் கொண்ட குழு தேர்வு செய்தது.

அதன்படி, ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ-2017 விருதுகளில், மொத்தம் 12 விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், அதிகபட்சமாக இந்தியா மூன்று விருதுகளை வென்றுள்ளது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இறுதி ஆட்டம் வரை முன்னேறிய இந்திய அணியில் ஹர்மன்பிரீத் கௌ சிறப்பாகச் செயல்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கான அரையிறுதியில் அவர் தனது தனிப்பட்ட அதிகபட்சமாக 171 ஓட்டங்கள் விளாசியதன் அடிப்படையில் அவருக்கு சிறந்த பேட்ஸ் உமன் விருது வழங்கப்பட்டது.

வலது கை லெக் பிரேக் பந்துவீச்சாளரான யுவேந்திர சாஹல், பெங்களூரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் 25 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் பேரில் சிறந்த டி20 பந்துவீச்சாளர் விருதை வென்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் முறையாக களம் கண்ட குல்தீப் யாதவ், 2017-ல் மூன்று ஃபார்மட்டிலுமாக 43 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் அடிப்படையில், சிறந்த அறிமுக வீரர் விருதை தட்டிச் சென்றார்.

சிறந்த கேப்டன் விருது, உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்தின் மகளிர் அணி கேப்டனான ஹீதர் நைட்டுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த பந்துவீச்சு வீராங்கனையாக இங்கிலாந்தின் அன்யா ஷ்ருப்சோல் தேர்வானார்.

சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், சிறந்த டெஸ்ட் பெüலராக சகநாட்டவர் நாதன் லயன் தேர்வாகினர்.

டி20 பேட்ஸ்மேனாக மேற்கிந்தியத் தீவுகளின் எவின் லீவிஸிம், சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்களாக பாகிஸ்தானின் ஃபகார் ஜமான், முகமது ஆமிரும் தேர்வாகினர்.