Asianet News TamilAsianet News Tamil

அந்த பையன் இல்லாம ஆஸ்திரேலியாவுல என்ன செய்யப்போறமோ தெரியல!! பேச்சிலயே பீதியை வெளிப்படுத்திய சாஸ்திரி

சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்த அணிதான் என்றாலும் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் அந்த அணி திணறிவருவதோடு சொந்த மண்ணிலேயே தோல்வியடைந்தும் வருகிறது. எனவே ஸ்மித், வார்னர் இல்லாததும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் முன்னெப்போதும் இல்லாததை விட சிறப்பாக இருப்பதும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம் என்பதால், இந்திய அணி தொடரை வெல்லுவதற்குத்தான் வாய்ப்பு உள்ளது.

hardik pandyas absence definitely a loss for team india said ravi shastri
Author
Australia, First Published Nov 19, 2018, 12:02 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் 1 அணியாக இருந்தும், தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்துவருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

அதேபோல உலக கோப்பைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக கருதி ஒருநாள் தொடரையும் வெல்லும் தீவிரத்தில் உள்ளது இந்திய அணி. இந்த ஆஸ்திரேலிய தொடரில் ஆடும் வீரர்களை கொண்ட இந்திய அணிதான் உலக கோப்பையில் ஆட உள்ளதாக தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துவிட்டார். எனவே இதற்கு மேல் எந்தவித சோதனை முயற்சிகளும் செய்யப்பட மாட்டாது. 

சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்த அணிதான் என்றாலும் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் அந்த அணி திணறிவருவதோடு சொந்த மண்ணிலேயே தோல்வியடைந்தும் வருகிறது. எனவே ஸ்மித், வார்னர் இல்லாததும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் முன்னெப்போதும் இல்லாததை விட சிறப்பாக இருப்பதும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம் என்பதால், இந்திய அணி தொடரை வெல்லுவதற்குத்தான் வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

hardik pandyas absence definitely a loss for team india said ravi shastri

 இந்தியா ஆஸ்திரேலியா தொடர் குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி, ஹர்திக் பாண்டியா மிகச்சிறந்த வீரர். ஆஸ்திரேலிய சூழலில் ஆதிக்கம் செலுத்தும் ஆட்டத்திறனை பெற்றவர் ஹர்திக் பாண்டியா. மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான அவரது இடத்தை இந்திய அணி பூர்த்தி செய்வது கடினம். ஹர்திக் அணியில் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என மைக் ஹசி தெரிவித்திருந்தார்.

வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, ஆசிய கோப்பை தொடரின்போது காயமடைந்தார். அதிலிருந்து இன்னும் குணமடையாததால் வெஸ்ட் இண்டீஸ் தொடரை இழந்த பாண்டியா, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் இடம்பெறவில்லை. உலக கோப்பை அணியில் ஹர்திக் பாண்டியா கண்டிப்பாக இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. 

hardik pandyas absence definitely a loss for team india said ravi shastri

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ரவி சாஸ்திரி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய ஆடுகளங்களையும் மைதானங்களையும் ரசிப்பார்கள். இங்கு அவர்கள் ரசித்து பந்துவீசுவார்கள் என்று நம்புகிறோம். இந்த நேரத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாதது பெரும் குறைதான். அவர் இருந்திருந்தால், ஒரு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் கூடுதலாக கிடைத்திருக்கும். எனினும் அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இல்லாதது பெரும் இழப்பு என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசி கூறியிருந்த நிலையில், அந்த கருத்தில் ரவி சாஸ்திரியும் உடன்பட்டுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios