ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்று சாதனை படைத்தது. அதன்பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வருகிறது ஆஸ்திரேலிய அணி. இரு அணிகளுக்கும் இடையே 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க உள்ளது. சொந்த மண்ணில் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, அதேபோலவே சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

வரும் 24ம் தேதி மற்றும் 27ம் தேதி ஆகிய தேதிகளில் இரண்டு டி20 போட்டிகள் நடக்கின்றன. அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. 

இந்த தொடரில் இந்திய அணியின் முதன்மை ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இடம்பெற்றிருந்தார். முதுகு பிரச்னை காரணமாக இந்த தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆசிய கோப்பையில் காயமடைந்து வெளியேறிய ஹர்திக், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களை இழந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, பெண்கள் குறித்து இழிவாக பேசிய சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஆஸ்திரேலிய தொடர் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான சில போட்டிகளை இழந்தார். அவருக்கு பதிலாக அணியில் இடம்பெற்ற விஜய் சங்கர், சிறப்பாக ஆடி தனக்கான இடத்தை உறுதி செய்தார். 

இதற்கிடையே, ஹர்திக் பாண்டியா உலக கோப்பையில் ஆடுவது அவசியம் என்பதால் அவரது சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு நியூசிலாந்து தொடரில் பாதியில் அணியில் இணைந்தார். நியூசிலாந்து தொடரில் ஹர்திக் சிறப்பாக ஆடினார். ஹர்திக் பாண்டியா மற்றும் விஜய் சங்கர் ஆகிய இரண்டு ஆல்ரவுண்டர்களும் ஆஸ்திரேலிய தொடரில் எடுக்கப்பட்டதால் ஜடேஜா நீக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவிற்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலிய தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டி20 அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தோனி(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, குருணல் பாண்டியா, விஜய் சங்கர், சாஹல், பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மயன்க் மார்கண்டே. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், ராயுடு, கேதர் ஜாதவ், தோனி(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, பும்ரா, ஷமி, சாஹல், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், சித்தார்த் கவுல்.

கடைசி 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், ராயுடு, கேதர் ஜாதவ், தோனி(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, பும்ரா, புவனேஷ்வர் குமார், சாஹல், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிஷப் பண்ட், ராகுல், ஷமி.