harbhajan singh tweet in tamil and csk fans welcomed harbhajan
இதுவரை மும்பை அணியில் விளையாடிவந்த ஹர்பஜன் சிங், இந்த ஐபிஎல்-லில் சென்னை அணிக்கு ஆடுகிறார்.
11வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களம் காணும் சென்னை அணி, தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகிய வீரர்களை ஏற்கனவே தக்கவைத்துள்ளது.
இன்று நடந்த ஏலத்தில ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி டுபிளெசிஸ், பிராவோ ஆகிய வீரர்களை சென்னை அணி தக்கவைத்தது.
அஷ்வினை ஆர்டிஎம் முறையில் தக்கவைக்க சென்னை அணி முயன்றது. ஆனால் சென்னை எதிர்பார்த்த தொகையை விட அதிகமான தொகைக்கு அஷ்வினை பஞ்சாப் அணி எடுத்ததால், சென்னை அணியால் அஷ்வினை தக்கவைக்க முடியவில்லை. எனவே அஷ்வினுக்கு மாற்றாக ஹர்பஜன் சிங்கை ரூ.2கோடிக்கு சென்னை அணி எடுத்தது.
இதையடுத்து இந்த ஐபிஎல்-லில் சென்னை அணிக்காக ஹர்பஜன் ஆட இருக்கிறார். இந்நிலையில், இதுதொடர்பான தனது மகிழ்ச்சியை ஹர்பஜன் டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு <a href="https://twitter.com/ChennaiIPL?ref_src=twsrc%5Etfw">@ChennaiIPL</a> Happy to be Playing for my new home <a href="https://twitter.com/hashtag/WhistlePodu?src=hash&ref_src=twsrc%5Etfw">#WhistlePodu</a></p>— Harbhajan Turbanator (@harbhajan_singh) <a href="https://twitter.com/harbhajan_singh/status/957142857290153984?ref_src=twsrc%5Etfw">January 27, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
அதற்கு சென்னை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
