harbajan sing tweet about his CSK team

சென்னை அணிக்காக ஐபிஎல் விளையாடவுள்ளதை ஒட்டி தமிழில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங், நான் வந்துட்டேன்னு சொல்லு, தமிழின் அன்பு உடன் பிறப்பெல்லாம் எப்படி இருக்கீங்க மக்கா ? என தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங். அண்மைக்காலமாக அணியில் இடம் கிடைக்கமால் தவித்து வந்தார். இந்நிலையில் இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்பஜன் சிங்கை ஏலத்தில் எடுத்தது. இதனால் மிகுந்த உற்சாகமடைந்த அவர், சென்னை அணிக்காக ஐபிஎல் விளையாடவுள்ளதை ஒட்டி டிவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

நான் வந்துட்டேன்னு சொல்லு! தமிழின் அன்பு உடம்பிறப்பெல்லாம் எப்படி இருக்கீக மக்கா? உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில வீரமா; காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல ஐபிஎல் விளாடப் போறத நெனச்சாலே மெர்சலாகுது;என்றும் தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!! என்றும் ட்விட் போட்ட தமிழக மக்களை மெர்சலாக்கி உள்ளார்.