ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் 2-ஆவது அரையிறுதியில் ஜார்க்கண்டை 123 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத், இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த குஜராத், முதல் இன்னிங்ஸில் 126.2 ஓவர்களில் 390 ஓட்டங்கள் எடுத்தது. கிரீத் பஞ்சல் 149 ஓட்டங்கள் விளாசினார்.

ஜார்க்கண்ட் தரப்பில் அஜய், ராகுல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய ஜார்க்கண்ட், முதல் இன்னிங்ஸில் 102 ஓவர்களில் 408 ஓட்டங்கள் குவித்தது. இஷாங்க் ஜக்கி 129 ஓட்டங்கள் எடுத்தார்.

குஜராத் தரப்பில் ஆர்.பி.சிங் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய குஜராத், 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 37 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 100 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 4-ஆவது நாள் ஆட்டத்தில் ஜுனேஜா 81 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

ஹர்திக் 6, சிரக் காந்தி 51 ஓட்டங்கள் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 81 ஓவர்களில் 252 ஓட்டங்கள் எடுத்தது குஜராத்.

ஜார்க்கண்ட் தரப்பில் நதீம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 235 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஜார்க்கண்டில் கெளஷல் சிங் மட்டும் 24 ஓட்டங்கள் எடுத்தார். எஞ்சிய வீரர்கள் மோசமான ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 41 ஓவர்களில் 111 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது ஜார்க்கண்ட்.

குஜராத் தரப்பில் பூம்ரா அதிகபட்சமாக 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.