Grand Free Gold Badminton is in Thailand today
கிராண்ட் ஃப்ரீ கோல்ட் பாட்மிண்டன் போட்டி தாய்லாந்தில் இன்று தொடங்குகிறது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் களம் காணும் சிங்கப்பூர் சாம்பியனான சாய் பிரனீத், தனது முதல் சுற்றில் இந்தோனேஷியாவின் நாதனைல் எர்னஸ்டன் சுலிஸ்டியோவுடன் மோதுகிறார்.
அதேபோல், கணுக்கால் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட குருசாய்தத், இந்தப் போட்டியின் மூலம் மீண்டும் களம் காண்கிறார். அவர், இந்தோனேஷியாவின் பஞ்சி அகமது மெளலானாவை எதிர்கொள்கிறார்.
மற்றொரு இந்தியரான காஷ்யப், ஸ்லோவேகியாவின் மிலன் டிரட்வாவுடன் தனது தொடக்க சுற்றில் மோதுகிறார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில், செளரவ் வர்மா, பிரதுல் ஜோஷி, ஆதித்யா ஜோஷி, ஹர்ஷீல் தானி, ஷ்ரேயான்ஷ் ஜெய்ஸ்வால், ராகுல் யாதவ் ஆகியோர் விளையாட உள்ளனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில், அர்ஜூன் எம்.ஆர்.-ராமச்சந்திரன் ஷ்லோக் இணையும், ஃபிரான்சிஸ் ஆல்வின்-கோனா தருண் இணையும், மகளிர் இரட்டையர் பிரிவில் ஜக்கம்புடி மேக்னா-பூர்விஷா எஸ்.ராம் ஜோடியும் களம் காண உள்ளது.
இதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவில், தேசிய சாம்பியன் ரிதுபர்னா தாஸ், ருத்விகா ஷிவானி கட்டே, ரேஷ்மா கார்த்திக், சாய் உத்தேஜிதா ராவ் சுக்கா, சைலி ரானே, ஸ்ரீ கிருஷ்ணப் பிரியா குதரவல்லி ஆகியோர் களம் காண்கின்றனர்.
மறுபுறம் சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியை தவறவிட்ட இந்தியாவின் சாய்னா நெவால், தற்போது தாய்லாந்து ஓபனில் பலப்பரீட்சை நடத்துகிறார்.
கிராண்ட் ஃப்ரீ கோல்ட் பாட்மிண்டன் போட்டியில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் சாய்னா, தனது முதல் சுற்றில் ஸ்லோவேகியாவின் மார்டினா ரெப்ஸிகாவை எதிர்கொள்கிறார்.
தற்போதைய போட்டியாளர்களை தேர்வு செய்யும் குலுக்கல் முறையான "டிரா'வின் படி ஆட்டம் நகரும் பட்சத்தில், சாய்னா இறுதிச் சுற்றுக்கு முன்னேறினால் அங்கு அவர், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தாய்லாந்தின் ரட்சனோக் இடானோனுடன் மோதுவார்.
